இனியவள் உந்தன் இருப்பிடமாச்சு
கனாவே நாளும் தொழிலாகிப் போச்சு-என்
கன்னுறக்கமெல்லாம் கடனாகிப்போச்சு
உச்சிமுதல் உள்ளங்கால்வரை உன்னினைவாச்சு -நான்
மூச்சுவிடும் நேரமட்டும் காற்று வரலாச்சு
பேசும் மொழியாவும் உந்தனது பேச்சு-இங்கு
வீசும் தென்றலெல்லாம் உன்னுடைய மூச்சு
நிமிஷ்மெல்லாம் நீண்டு முழு நாளகியாச்சு-உந்தன்
நினைவே முழு நாளும் எனக்கு உணவாகியாச்சு
நாளும் பொழுதும் மாறியே போச்சு-எனக்கு
நள்ளிரவு கூட நல்ல பகலாகப்போச்சு
நிம்மதி இன்று பகையாகிப்போச்சு-எனது
நிழல்கூட இங்கு நிலைமாறிப் போச்சு
கண்கள் இரண்டும் சிறு குளமாகிப் போச்சு -உன்னைக்
காணாமல் இமையிரண்டும் சருகாகிப்போச்சு
பாலும் பழமும் நல்ல பழசாகிப்போச்சு -புதுப்
படுக்கையும் பஞ்சணையும் தூசாகிப் போச்சு
பார்த்துப் பார்த்து கண்ணும் பூத்துப் போச்சு -நீ
பாராமலே எனக்கு நல்ல வயசும் ஆச்சு
உலகமெனக்குச் சிறிதாகிப் போச்சு- இந்த
உருவமும் உள்ளமும் சிறு ஓடாகிப் போச்சு
இதையத்தில் இருந்ததெல்லாம் எழுத்தாக்கியாச்சு-இனி
இறுதி மூச்சு ஒன்றுதான் இருப்பாக்கியாச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள