'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
புதன், 16 செப்டம்பர், 2009
உறவுகளை முழுசாக நம்பி.......
வருமானம் வற்றி வருந்தி அழுகின்றோம்
வயிற்றின் தேவைகள் கூடிவருந்துகின்றோம்
பெறுமானம் குறைந்து பேயாக அலைகின்றோம்
பெருமானே வந்து யுன் பேரருளைக் காட்டாயோ!
மண்டியிட்டோம் மாரடித்தோம் மலையெனவே நம்பினோம்
பண்டையயுறவு பார்த்திருக்குமா பெரிதாகப் பம்பினோம்
கண்டவிலைக்கு காசாக்குவாரன்று கணவிலுமா எண்ணினோம்
தென்னாடுடைய சிவனே பெருமானே கண்திறந்து பாராயோ!www.tamil10.com/submit/
சண்டை முடிந்து சமாதானம் நாடினோம்
மண்டை வெடிக்குது சமரசமாம் ஓடினோம்
கண்டநாள் முதல் இதையே சுதி பாடினோம்
கண்கண்ட கடவுளே கருணைதான் புரியாயோ!
ஆண்ட பரம்பரைதான் அடிகள்தான் வாங்கினோம்
ஈன்டதாயுமதை இனிதாக நாடினாள் நசுங்கினோம்
மீண்டுமொருமுறை மாண்டுபோகவா மிஞ்சினோம்
கண்கண்ட தெய்வமே கருணைதான் புரியாயோ!
உறவுகளை முழுசாக நம்பி ஓட்டாண்டியானோம்
உடன்பிறவாச் சகோதரத்தால் ஓரமடைந்தோம்
பெருமாளின் பிறப்புக்களால் இந்தநிலை கண்டோம்
திருநீறு புனைந்த ஈசனே கருணை பொழியாயோ!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள