மனிதனுக்கு மனிதன்
குண்டு வைப்பானென்று
மனிதனை மனிதன்
சோதித்து
இங்கே
மனிதத்தை
தேடுகின்றான்
சிட்டுக் குருவிகளுக்கு
"செக்கிங் பொயின்ட்"
இல்லவே இல்லை
அவை எப்போதும்
சுதந்திரமாகவே
சிறகு விரிக்கின்றன
ஆடுகளுக்கு
""ஐடேன்டிகார்ட்" கிடையாது
அவை
அறுபடு மட்டும்
இரையும் இலவசம்
கழுதைகளுக்கு
"ரவுண்டப்" கிடையாது
அவைகளில்
முக மூடிகளுமில்லை
எந்த நாயும்
எந்த நாயையும்
சோதிப்பதில்லை
இவைகளினால்
ஆண்டவா
அடுத்தபிறவியிருந்தால்
எனக்கிந்த
மனிதப் பிறவி
வேண்டவே வேண்டாம்.
நீதி வாக்கியர் இரா. தவராஜா மட்டக்களப்பில் பிரபல எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைதுள்ளவர். இவர் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து மட்டகளப்பின் பெருமைகளை பல வேதைனைகளின் மத்தியில் சாதனைகளாக "அரங்கம்" கலை இலக்கிய இதழின் மூலம் நிகழ்த்திக் காட்டியவர். எழுபதுகளின் பின்னர் இற்றை வரை தன்னால் முடிந்தவரை தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அளப்பெரிய தொண்டாற்றுகிறவர்.இவரின் இந்தக் கவிதையை இன்று பதிவிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்து இரா. தவராஜா அவர்களின் ஆக்கங்கள் எமது பதிவில் வெளியாகும். இவர் அரங்கன், எழுச்சிக் கவிஞர், அரங்கநாயகி, நீதி வாக்கியர் என்ற பெயர்களில் பல படைப்புகளை வெளியிட்டுருக்கிறார். அன்னாரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்.
அன்பு நண்பருக்கு,
பதிலளிநீக்குவணக்கம். உங்கள் நகராம் மாநகராம் வீடியோ இப்போதுதான் பார்த்தேன். முதல் முயற்சியிலேயே அருமையாக செய்துள்ளீர்கள். தங்கள் படைப்பை பார்க்கும் சமயம் என்னுள் ஆனந்தம் அலை வீசுகின்றது. தங்களுக்காகவே இதன் தொடர்ச்சியை விரைவில் வெளியிடுகின்றேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பின்குறிப்பு :- கருத்துரையிடுகையில் உள்ள வேர்ட் வெரிபிகேசனை நீக்கிவிடவும்.