வியாழன், 13 ஏப்ரல், 2023

தூங்காமை,கல்வி,துணிவுடமை.

 இன்றைய குறள்:

பொருட்பால் > அரசியல் > இறைமாட்சி
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.   (383)

நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
— மு. வரதராசன்

செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
— சாலமன் பாப்பையா

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்
— மு. கருணாநிதி

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

வருவிருந்து..

 

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. 

நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்  (௮௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.  (௮௰௩)
— மு. வரதராசன்


நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.  (௮௰௩)
— சாலமன் பாப்பையா

திங்கள், 3 ஏப்ரல், 2023

ஈனருக்கு உரைத்திடாதே

 ஈனருக்கு உரைத்திடாதே .


வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்,
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்,
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்,
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.
 (விவேக சிந்தாமணி)

ஒரு குரங்கானது மழையில் நனைந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த (முன்னரே கூடுகட்டி வசிக்கும்) தூக்கணம் பறவை ஒன்று, தன்னைப்போல் ஒரு இருப்பிடம் அமைத்து பாதுகாப்பாக வாழக்கூடாதா? என்று கேட்க, கோபம் கொண்ட குரங்கு குருவியின் கூட்டை பிய்த்தெறிந்தது. கீழான குணம் கொண்ட அறிவில்லாதவர்க்கு கல்வியால் தான் பயின்ற நூல்களின் ஞானத்தை உபதேசம் செய்தால் அது துன்பத்தை உண்டாக்கும். 

(கேளாமல், தகுதி பாராமல் எதையும் சொல்லாதே)
நனறி:Purnayogamp0

அகவை தின, வாழ்த்துகள்..!

 


                                                                        24-03-1965

ஐம்பத்தெட்டாவது அகவையில் கால்பதிக்கும்,-திருமதி

எனதருமைத் துணைவிக்கு,இனிய வாழ்த்துக்கள் 

கடந்துவந்த பாதையில்,சாதனைகளையும்-பல

சோதனைகளையும்,சரிசமமாக ஏற்று,

சரித்திரமாக மாற்றும், வல்லமை கொண்ட-எந்தன்

வெற்றித் திருமகளே,! வாயார வாழ்த்துகின்றேன். 

இப்புவியில் இணைந்த நாள் தொட்டு,இனிதாக-நீ

இன்னும் வாழ, இறைவனை பிரார்த்திக்கிறேன்,!

வியாழன், 26 ஜனவரி, 2023

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரத் தயார் – ஜெய்சங்கர் வந்த சூட்டோடு ரணில் சம்பந்தனுக்கு உறுதியளித்தார்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்குத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து திரும்பியதை அடுத்து அவசர அவசரமாக நேற்றுமுன்தினம் பிற்பகல் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளார்.
‘தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைவு தயாராகி வருகின்றது. அது நிறைவடைந்தவுடன் காணி அதிகாரங்கள் மாகணங்களுக்கு வழங்கப்படும். மாகாணங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் எண்ணிக்கையை 10 ஆக வரையறுப்பதற்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்பது மாகாணங்களுக்கும் தலா ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரும், கொழும்பு மெற்றோபொலிட்டன் பிரிவுக்கு ஒருவருமாக பத்து நியமனங்கள் வரையறுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் அவர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரா. சம்பந்தனிடம் உறுதியளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.


புதன், 25 ஜனவரி, 2023

ஜப்பானின் அழகு,


சொல்வதற்கில்லை இந்த அழகு,---அதைச்

சொல்ல முடியவில்லை சுந்தரத் தமிழில்.

வெல்லத்தான் முடியுமா வேல் விழியழைகை,--இனி

கொல்லத்தான் துணிந்துவிட்டீர்கள்,கொஞ்சம் பொறுமை.


うまでもなく、この美しさ――あの

美しいタミル語で言えません。

勝つことしかできませんが、ビリヤロカイ、--もうありません

あなたはあえて殺します、少しの忍耐。

(தமிழின் ஜப்பான் மொழிபெயர்ப்பு)



 இது,எனது இளைய மகளின்,திருமணத்தின் போது,திருமணத்திற்காக இவர் இலங்கை வந்து கலந்து   கொண்டபோது, இவருக்கு நமது நாட்டுடையணிந்து எடுத்த படம். 

செவ்வாய், 24 ஜனவரி, 2023

சிந்திப்போம்.....

 

சிந்திப்போமா...

 தமிழகத்தில் வளரும் மூதேவிகளும் அவர்களைப் பெற்ற பெரும் மூதேவிகளுக்கும்


நேற்று வேலையிலிருந்து வந்து வீட்டில் தொலைக்காட்சியை ஆன் செய்தால்  அஜீத்தின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் பொங்கல் வெளியிடான அஜித்தின் படம் பார்க்கச் செல்கையில் ஒரு லாரி மீது ஏறி ஆட்டம் போட்டு கீழே விழுந்து இறந்து போய்விட்டான்.. உடனே வழக்கம் போல ஊடகங்கள் அதனைக் கவர் செய்து அவர் ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டது மாதிரி செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அந்த பையனின் குடும்பத்தினரும்  நண்பர்களும் இரக்கம் வருவது மாதிரி பேசுகிறார்கள்.


இதில் அந்த பையனின் அம்மா நடிகனின் பின்னால் போகாதீர்கள் அவர்களாக வந்து உதவப் போகிறார்கள் என்று ஊடகங்களிடம் சொல்லி அழுகிறார். அட கூறு கெட்டவளே இதை ஊடகத்திடம் சொல்லுவதற்குப் பதில் உன் புள்ளைக்கு சொல்லி வளர்த்து இருந்தால் இன்று உன் புள்ளையாவது உயிரோடு இருந்திருப்பான். ஒருவேளை அப்படிச் சொல்லி வளர்த்து இருந்தாலும் அதன் பின் உன் பையன் அதைக் கேட்காமல் கூறு கெட்டு வளர்ந்து இருந்தால் அவன் இருப்பதோடு போய்ச் சேர்ந்ததே நலம் என்று சந்தோஷமாக இருக்கவேண்டும்


 கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த  இந்த பையன்தான் அந்த குடும்பத்திற்கு ஆதாரமாம். அப்படி இருந்தும் தனது தகுதிக்கும் மீறிக் கஷ்டப்பட்டு  உழைத்து  சம்பாதித்த ஊதியத்தை, 2,500 ரூபாய் கொடுத்துப்  படத்தைப் பார்க்க டிக்கெட் வாங்கியிருக்கிறான்  அதுவே மிகத் தவறு அதோடு நிறுத்தாமல்  படம் பார்க்கப் போனால் படத்தைத்தானே பார்க்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்யாமல் வழியில் வந்த லாரியின் மீது மற்றவர்களுடன் சேர்ந்து ஏறி ஆட்டம் போட்டு  நிலை தடுமாறி கீழே விழுந்து முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டுச் செத்துப் போய்விட்டான். இப்படித்தான் படம் பார்க்க வேண்டும் என்று எந்த நடிகரும் சொல்லவில்லை. இவன் களாக இப்படிக் கூறு கெட்டு நடந்து கொண்டு கடைசியில் நடிகர்களால் இந்த நாடே கெட்டுப் போய்விட்டது என்று அவர்கள் மீது பழி சொல்லுவது அவர்கள் வந்து இப்படிக் கூறு கெட்ட ரசிகர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.


அதிலும் அஜித் மற்ற நடிகர்கள் போலச் சமுகத்திற்குக் கருத்து சொல்லுரேன் மயிறு சொல்லுரேன் என்று ரஜினிகாந்த் மாதிரி இல்லாமல் வந்தோமோ படத்தில் நடித்தோமா அதற்கான ஊதியத்தை வாங்கினோமா தன் குடும்பத்தோடு நேரம் செலவழித்தோமா தனது பொழுது போக்கான கார் பைக் ரேஸில் கலந்து கொண்டோமா என்று அமைதியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார். அவர் எந்த கட்சியையும் கட்சி தலைமையும் ஆதரித்தோ எதிர்த்தோ பேசுவதில்லை போலியான சமுக அக்கறை உள்ளவர்கள் போலவும் நடிப்பது இல்லை தன்னால் முடிந்த உதவிகளை  எந்த வித சத்தமும் ஆர்ப்பாட்டமும்  விளம்பரமும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்.


அப்படிப்பட்டவர் இந்த பையன் தன் ரசிகனாக இருந்ததால் அவரின் குடும்பத்திற்கு உதவ வேண்டுமாம் அடேய் கூறு கெட்ட பயல்களா போய் வேலை மயிரை போய் பாருங்களாடா...


சமுகமும், எந்த அமைப்பும் , எந்த நடிகரும் இது போலக் கஷ்டத்திற்கு உள்ளாகும் குடும்பத்திற்கு உதவவே கூடாது அதுதான் இந்த சமுகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடம்....அப்படி இல்லாமல் உதவ  முன் வந்தால் அது ஒரு மோசமான முன் உதாரணமாகத்தான் இருக்கும் .அந்த குடும்பம் அந்த பையன் இருந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் காரணம் இப்படிப் பொறுப்பில்லாமல் 2500 ரூ டிக்கெட் வாங்கும் அந்த பிள்ளை நாளை பொறுப்புடனும் கஷ்டத்தில் இருக்கும் தன் குடும்பத்தைப் பெற்றோர்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக நினைக்கவே மாட்டான் இந்த பையன் 2500 ரு கொடுத்து முதல் ஷோ பார்க்கவேண்டும் என்று டிக்கெட் எடுப்பவன்  வரும் காலத்தில் முதல் ஷோ முதல் டிக்கெட் எனது டிக்கெட்டாகவே இருக்க வேண்டும் என்று 10000 ம் கொடுத்து முதல் டிக்கெட்டை வாங்க வேண்டும்தான் என்று நினைப்பான் அதைத்தான் தன் சாதனையாகக் கருதுவான் அப்படிப்பட்ட இந்த பையன் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன?


இழப்பு இழப்புதான் அதற்காக நாம் வருந்த வேண்டுமே தவிர அந்த இழப்பை வைத்து மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற்று அவர்களின் உதவிக்  கொண்டு  வாழ் முயற்சிக்க கூடாது


இந்த பையன் மட்டுமல்லாமல் முதல் ஷோ  அல்லது  முதல் வாரத்தில் படம் பார்த்துவிட வேண்டும் என்று அப்பத்தான் பெருமை என்று குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ செல்லும்  படித்த  இந்திய வாழ் மற்றும் மேலை நாடுகளில் வாழும் இந்திய அனைத்து மக்களுக்கும் இந்த பையனுக்கும் வித்தியாசங்கள் ஏதுமில்லை எல்லோரும் ஒருவிதமான கூமுட்டைகள்தான் என்னைப் பொருத்தவரை


அன்புடன்

மதுரைத்தமிழன்.

படித்ததில் பிடித்தது. 

முத்தழகு.

அகவை "80ல்"
 தடம்பதிக்கும்
இலங்கையின் மூத்த பாடகரும் எனது நன்பருமாகிய திரு.வி.முத்தழகு அவர்களுக்கு இனிய அகவைதின நல்வாழ்த்துகள் உரித்தாகுக..
       ★★★★★★★★



வி. முத்தழகு !

இலங்கையின் பிரபல மெல்லிசை, திரையிசைப் பாடகர். கண்டியில் பேராதனையில் பிறந்து மெல்லிசைப் பாடகராக கலை உலகிற்கு வந்தவர் வி. முத்தழகு. சிங்களம், தமிழ், இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார். மெல்லிசைப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் என அவர் பங்களிப்பு இருந்திருக்கிறது.

1957 ம் ஆண்டு இலங்கை வானொலியில்
 "தொழிலாளர் வேளை" எனும் நிகழ்சியில் திரு.
"கே.எம்.சவாஹிர்"
அவர்களின் இசையில் முதன் முதலாக பாடிய

"குயிலே செந்தமிழால் பண்பாடுவாய்,

"எனை ஆளும் தேவனே ஏசுவின் நாமமே"

என்ற பாடல்கள்  இலங்கை வானொலியின் "1"ம் இலக்க கலையகத்திலிருந்து நேரலையாக ஒலிபரப்பாகியது..

அன்றிலிருந்து  பாட ஆரம்பித்து இன்று வரை ஏறத்தாழ 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.

முத்தழகு கண்டி மாவட்டம், பேராதனையில் வெள்ளச்சாமி, சரசுவதி ஆகியோருக்கு 1943 ஆம் ஆண்டில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

பிறந்த ஓரிரு ஆண்டுகளில் குடும்பத்துடன் கொழும்பு, திம்பிரிகசாய என்ற இடத்தில் குடிபுகுந்தார்.
பம்பலப்பிட்டி புனித மேரி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடக்கூடியவர். காரைக்குடியைச் சார்ந்த இவரைப் பாட்டு வாத்தியார் குடும்பம் என்று அழைப்பார்கள்.

1963-இல் பாடசாலையின் சிங்களப் பிரிவில் நடைபெற்ற மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்றில், இவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதே ஆண்டில் பாக்கித்தான், லாகூர் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. சாரண இயக்கத்தில் அங்கு சென்ற முத்தழகு இந்த இசை நிகழ்ச்சியில் உருது, சிங்கள, தமிழ் மொழிகளில் பாடினார்..

இலங்கை வானொலியில் மெல்லிசை பாடுவதற்கு வி.முத்தழகு தேர்வுபெற்றபின் 1971ல் தனது முதலாவது மெல்லிசைப்பாடலை இலங்கை வானொலியில் பாடும் சந்தர்ப்பத்தை பெற்றார்.

 க. கணபதிப்பிள்ளை பாடல் எழுத ஆர். முத்துசாமி இசையமைத்தார். அன்னை பராசக்தி.... என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ஏராளமான மெல்லிசைப்பாடல்களை இலங்கை வானொலியில் பாடியிருக்கிறார்.

 1970 - 1980 காலப் பகுதியில், இலங்கை   வானொலியின் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப் பாடகராக முத்தழகு விளங்கினார்.


நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.

 முதன் முதலில் புதிய காற்று படத்தில் பாடும் வாய்ப்பை வி. பி. கணேசன் இவருக்கு வழங்கினார்.

இந்தத்திரைப்படத்தில் இவர் முதலில் பாடிய 'ஓகோ என்னாசை ராதா' மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் இவர்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார் என்று கூறலாம்.

 தொடர்ந்து கோமாளிகள், ஏமாளிகள், நான் உங்கள் தோழன், தென்றலும் புயலும், வாடைக்காற்று, தெய்வம் தந்த வீடு, அநுராகம், எங்களில் ஒருவன், நெஞ்சுக்கு நீதி, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, சர்மிளாவின் இதயராகம் போன்ற படங்களில் பாடினார்.

 புதிய காற்று 1975ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 'சர்மிளாவின் இதயராகம்' 1993ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 20 ஆண்டு இடைக்காலத்தில் உருவான சகல தமிழ்ப் படங்களிலும் முத்தழகு பின்னணி பாடியிருக்கிறார்.

 10க்கு மேற்பட்ட சிங்களப் படங்களிலும் பாடியிருக்கிறார். யசபாலித்த நாணயக்காரவே முத்தழகுவுக்கு சிங்களச் சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பை வழங்கினார்.

'அஞ்சானா' என்ற படத்தில் விஜய குமாரதுங்கவுக்கு பின்னணி பாடும் வாய்ப்பே அது.

 தமிழில் 'நாடு போற்ற வாழ்க' என்ற பெயரில் வெளிவந்த படமே, சமகாலத்தில் 'அஞ்சானா' என சிங்களத்தில் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிப்படங்களிலும் முத்தழகு பின்னணி பாடினார்.

சப்தஸ்வரம்' என்ற தனி நபர் இசை நிகழ்ச்சியைப் பலமுறை மேடையேற்றியவர்.

1974ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையுள்ள 30 வருட காலத்தில் 'சப்தஸ்வரம்' நிகழ்ச்சியை 15 முறை மேடையேற்றியிருக்கிறார்.

 'சப்த ஸ்வரம்' தமிழ் நிகழ்ச்சியைப் போல் 'காதல் மொட்டுகள் மலர்கின்றன' என்ற தலைப்பில் தனி நபர் சிங்கள நிகழ்ச்சியை 10 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறார்.

1995ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான ஜனாதிபதி விருதும் 2002 ஆம் ஆண்டு தேசிய பாடகருக்கான 'கலாபூஷணம்' விருதும் கிடைத்தது. 1987 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சு இவருக்கு 'மெல்லிசைச் செல்வன்' என்ற பட்டத்தை வழங்கியது.

'இன்னிசை மணி', 'கலை மணி' என்பனவும் முத்தழகுவுக்கு கிடைத்த மேலும் சில பட்டங்களாகும்.

மேலும்  இவரின் புகழ் பெற்ற பாடல்களில்..

"புதியகாற்று"
 திரைப்படத்தில் 

"ரி.எப்.லத்தீப்" அவர்களின் இசையில் பாடிய

"ஒஹோ என்  ஆசை ராதா  ,

 அநுராகம் திரைப்படத்தில் ஈழத்து   இரத்தினம் அவர்களின் பாடல் வரிகளுக்கு

சரத் தசநாயக்கா அவர்களின் இசையில்
 இடம்பெற்ற

"எண்ணங்களாலே' இறைவன்தானே"
 பாடல்கள்
இன்றும் கேட்க தூன்டும் ...★★★★






Arunan Meenachchisundaram

சனி, 21 ஜனவரி, 2023

தொலைமனமுணர்தல் (telepathy)

 




நான், பொங்கல் நேரம்,எனது மனைவியுடன்,கதைக்கும்போது,சஹீஸ்னு

எனது பேரன் US,இல் இருப்பவன் இலங்கையில் இருந்து இருந்தால்,KFC

சாப்பாட்டை நல்லா விரும்பிச் சாப்பிடுவான்,வாங்கி வந்ததும்,அந்தப்  பார்சலை 

தூக்கிக்கொண்டு ஓடும் அழகே தனி. சிறு பிள்ளை தானே என இருவரும் 

நினைத்துக் கதைத்தோம்.


அதே நேரம், அமெரிக்காவில்  எனது பேரன் தனது தாயிடம்,"அம்மா,அம்மப்பா

வாங்கி வரும் KFC நல்ல ருசியாக இருக்கும். ஆனால்,இங்கு  வாங்கும் KFC

ஏன்? ருசி குறைவாக இருக்கிறது" என்று கேட்டிருக்கிறான்.


ஒரே, விசயம், இடம் மட்டும் வித்தியாசம்,ஆனால், நேரம், சிந்தனை எல்லாம்

ஒத்துப்போகிறது.இப்படி பல  நிகழ்வுகள்,என் வாழ்க்கையில் நிறைய 

சந்தித்துள்ளேன்.இவரைச் சந்திக்க வேண்டும் என நினைக்கும்போது, அவர்

நேர் எதிரே, நம்மைத்தேடி வந்துகொண்டிருப்பதை  நான் பல முறை 

அவதானித்துள்ளேன்.

உதாரணத்திற்கு சில சினிமாப்பாடல்களை முனுமுனுக்கும்

போது அது வானொலியில் ஒலிபரப்பாகும். உங்கள் வாழ்கையிலும் இப்படியான

நிகழ்வுகள், நடந்திருக்கும், இனி வரும் காலங்களில் கவனியுங்கள். இது 

சம்பந்தமான விவரத்தை விக்கிபீடியாவில்  கீழ் வருமாறு  தந்துள்ளார்கள்.

                                    சஹீஸ்னு  தங்கை லக்ஸ்மிதாவுடன்.

                   
(telepathy) என்பது, புலன் உறுப்புக்கள் எதையும் பயன்படுத்தாமலும், பௌதீகத் தொடர்புகள் இன்றியும், ஒருவருடைய மனத்தில் இருந்து இன்னொருவர் மனத்துக்குத் தகவல்கள் செலுத்தப்படுவது ஆகும். அதாவது,
 பேசுதல், கேட்டல், சைகை காட்டுதல், எழுதிக் காட்டுதல் போன்ற பல்வேறு வழமையான தொடர்பு முறைகளின் பயன்பாடு இல்லாமல் ஒருவர் எண்ணுவதை மற்றொருவர் அறிந்து கொள்வதே "தொலைமனமுணர்தல்" எனப்படுகிறது. அறிவியலாளர்கள் இதனை ஒரு உண்மையான தோற்றப்பாடாகக் கருதுவது இல்லை. தொலைமனமுணர்தல் என்னும் ஒன்று இருக்கிறதா என அறிந்துகொள்ளவும், அதைப் புரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்குமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், கட்டுப்பாடான சோதனைகளின் கீழ் இதை உண்மை என்று நிறுவுவதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை..

தற்காலப் புனைகதைகளிலும், அறிவியற் புனைவுகளிலும் தொலைமனமுணர்தல் இடம்பெறுவதைக் காணலாம். இவற்றில், வேற்றுக்கோளினரும், மீவியல்பு நாயகர்களும் இத்தகைய ஆற்றல்களைக் கொண்டவர்களாகக் காட்டப்படுவது உண்டு.

பொது அறிவு TÑPSC