
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
இனிமையை என் சொல்வேன் புதுமை!

வெள்ளி, 4 செப்டம்பர், 2009
தினசரி ஹோரை

ஒரு நகைச் சுவைக் கதை ஓன்று இதற்கு ஏற்றால் போல.மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒரு சிவன் கோயில் அதில் பக்தர்கள் சென்று வழிபட்டு தங்கள் தேவைகளை இறைவனிடம் வேண்டி, அப்படி அது நடந்தால் இறைவனுக்கு நான் என்னசெய்ய நினைத்திருப்பதாகவும் வேண்டி வணங்கி செல்வார்கள்.இது இந்து மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ள ஓன்று . அன்றும் வழைமைபோல் மக்கள் தங்கள் வேண்டுதல்களை இறைவனிடம் வைத்தார்கள், வேண்டுதல் நிறைவேரியவர்கள் அதற்குரிய நேர்த்திக் கடன்களை செலுத்திக் கொண்டு சென்றார்கள். இப்போது நமது கதையின் நாயகன் கோயிலுக்கு வந்தார் "இறைவா, நான் பெரிய கஷ்டத்தில் இருக்கின்றேன் இதிலிருந்து மீளவேண்டும் என்றால் எனக்கு நாளை குலுக்கப் போகும் பெரிய தொகை அதிர்ஷ்ட இலாபச் சீட்டு எனக்கே கிடைப்பதற்கு அருள்புரிய வேண்டும் .எனக்கு கிடைத்தால் இந்தக் கோயிலுக்கு நான் பெரிய கட்டிடம் ஓன்று கட்டித்தருவேன், கிடைக்க அருள் செய்யாவிட்டல் எனது ஒரு கரத்தை உன் முன்னால் வெட்டி எறிவேன் என்று சபதம் செய்துவிட்டுச் சென்று விட்டான்.அதிர்ச்டலாபச் சீட்டு குலுக்கும் நாளும் வந்தது குலுக்கப் பட்டது பரிசும் வெல்லப்பட்டது. நமது கதநாயகன் பெரிய கத்தியுடன் கோயிலில் இறைவன் முன் ஆஜரானான். இறைவா! என்னை ஏமாற்றி விட்டாய் நான் கேட்டதை நீ தரவில்லை அனால் நான் சொன்னதை செய்கிறேன் என்று ஒரு கரத்தை வெட்டி எறிந்துவிட்டு, இறைவனிடம் மீண்டும் சொன்னான் "அடுத்த சீட்டுளிப்பில் எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் எனது அடுத்த கரத்தையும் வெட்டி விடுவேன்" என்று பயங்கர சபதம் செய்துவிட்டு சென்றான்.
சீட்டு குலுக்கும் நாளும் வந்தது, அதிர்ஷ்டம் பார்க்கப் பட்டது. நமது கதையின் நாயகன் கையில் கத்தியுடன் கோயிலை நோக்கி புறப்பட்டார். இதை இறைவனும் அன்னை பராசக்தியும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் வழைமைபோல இறைவனிடம்" என்னை ஏமாற்றி விட்டாயே இறைவா! இன்று நான் எனது மறு கரத்தையும் உனக்காக தறிக்கப் போகிறேன்" என்று அழுதான். இவனது நிலையைப் பார்த்த அன்னை "சுவாமி தங்கள் மீது இவ்வளவு பக்தி வைத்துள்ள இவனை நீங்கள் இரட்சிக்கக்கூடாத தயவு கூர்ந்து கருணை செய்யுங்கள்" என்றார் இறைவன் இரன்குவதாக தெரியவில்லை.மீண்டும் அன்னை பராசக்தி, தாய் அல்லவா இறைவனை நோக்கி "நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு விடை கொடுங்கள் நான் உதவி செய்கிறேன்" என்றார். இறைவன் பராசக்தியைப் பார்த்துச் சொன்னார் " அருள் செய்யலாம்தான், ஆனால் அதற்கு உரிய முயற்சிகள் அவனிடம் இல்லையே " இதை விட இன்னும் என்ன முயற்சி அவன் செய்ய வேண்டும்" என்றுபராசக்தி பரமசிவனைப் பார்த்துக் கேட்டார்கள். முதலில் அவன் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வாங்கட்டும், பின்பு அவனுக்கு அதிர்ஷ்டம் வழங்குவதைப்பற்றி சிந்திப்போம் என்றாராம்.
எப்படி இருக்கிறது நம்மவர்களின் வேண்டுதல்கள். எதையும் சரிவரச் செய்யாமல் இக்கட்டில் மாட்டிவிடுவதில் வல்லவர்கள்.இதைப்போல்தான் எதையும் சரியாகச் செய்யாமல் ஜோதிடத்தையும், இறை வணக்கத்தையும் குறை கூறிக் கொண்டேயிருப்பார்கள்.
விசயத்திற்கு வருவோம் எந்த நாளில் என்ன காரியங்கள் செய்யலாம் என்பதை கவனித்து விட்டு, அட்டவணைக்கு செல்வோம்
சூரிய ஹோரை :
உத்தியோகம்,வியாபாரம் சம்பந்தமாக ஒருவரின் உதவிகளை பெறவும், பெரிய தொழில் அதிபர்களை, பெரிய உத்தியோகஸ்தர்களை சந்திப்பதற்கும், சொத்து சம்பந்தமான பதிவுகள் செய்வதற்கும் இது உகந்த நேரம்.
சந்திர ஹோரை:
வியாபாரம், பெண்கள்,பிரயாணம் இவைகளைப் பற்றி பேசவும் காண்பதற்கும் இந்த ஹோரை ஏற்றது.தேய்பிறை சந்திரனனால் தவிர்ப்பது நலம்
செவ்வாய் ஹோரை:
மனதில் உள்ளவற்றை மறைமுகமாக வைத்திருத்தல் நன்மையளிக்கும்.இவ்வோரையில் எதையும் செய்யாமல் விடுவது நலம் .
புத ஹோரை:
எல்லாவித எழுத்து சம்பந்தமான வேலைகளுக்கு,ஆரம்பிக்க தொடர்புகளை ஏற்ப்படுத்த, அறிவிக்க (புளொக்கரை பதிவேற்ற ) சட்டத்தரணிகளை சந்திக்க நல்ல ஹோரை இது .
குரு ஹோரை :
எல்லா வகையான செய்கைகளுக்கும் ஏற்றது. கடன் கொடுப்பவர்களை சந்திக்க,கடன்களை பெறுவதற்கு புதிதாக எதையாவது தொடங்க,ஆடை ஆபரணங்கள் வாங்க, தெரிவு செய்ய ,காரியங்கள் தடையின்றி நடக்க
சுக்கிர ஹோரை :
சகல விதமான நல்ல வேலைகளுக்கும் ,பெண்களுடன் பேச, பார்க்க பரிதவிக்க,அவர்கள் உறவை ஆரம்பிக்க, விருந்தோம்பல், மருந்துண்ண,கடன் கொடுத்தவர்களிடம் வசூல் செய்ய,வாகனம் வாங்க
சனி ஹோரை :
தோட்டங்களைப் பற்றி பேசவும் , நடவடிக்கை எடுக்கவும் மட்டும் சிறந்தது . மற்ற எதற்கும் இது ஏற்றதல்ல
இவைகளை எப்படி கண்டு பிடிக்கலாம் என்று ஜோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம் மேலே உள்ள அட்டவனையை பாருங்கள் எல்லாம் சரியாக தயாரிக்கப் பட்டுள்ளது .கிழமையை தெரிவு செய்யுங்கள் நேரத்தை பாருங்கள். உங்கள் மணிக்கூட்டை பார்க்காதீர்கள் அட்டவணையில் உள்ள நேரத்தை பாருங்கள் இப்போது விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். விளங்கா விட்டால் பின்னூட்டம் இடுங்கள் தனியாக விளக்கம் வைக்கலாம்
வியாழன், 3 செப்டம்பர், 2009
இலங்கைச் சரித்திரம் -21

படிக்கும் முன் இலங்கைச் சரித்திரம் 01-ல் இருந்து ஆரம்பியுங்கள். அங்கிருந்து வந்தால் தான் எதுவும் விளங்கும்இலங்கைச் சரித்திரம்-20

படிக்கும் முன் இலங்கைச் சரித்திரம் 01- ல் இருந்து ஆரம்பியுங்கள். அங்கிருந்து வந்தால் தான் எதுவும் விளங்கும் பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள் தொடரும் 21 வது பக்கத்திற்குச் செல்ல ..புதன், 2 செப்டம்பர், 2009
ஏன்? மௌனமானாய்?

முத்தங்கள்ஆயிரம்
தந்து –என்
மூச்செல்லாம்
பெரும்
நெருப்பாக்கி
சித்துக்கள் செய்து
காட்டிவிட்டு –தேவ
சுந்தரியே ! ஏன்? மௌனமானாய்?
அத்தான் என்று அழைத்து -என்
அங்கமெல்லாம்
என்னைக்
குளிரவைத்து
பித்தனாகயெனை இங்கு
ஆக்கிவிட்டு-இன்று
பேசாமல்!, ஏன்? மௌனமானாய்?
சிட்டாகப்
பறந்து வந்து-முல்லை
மொட்டாக
மலர்ந்து
என்னை
திண்டாட
வைத்த
மங்கையே –நான்
மண்டாட!, ஏன்? மௌனமானாய்?
செத்தாலும் உன்னுடனே
சாவேன் --யாரும்
எதிர்த்தாலும்
உன்னுடனே
வாழ்வேன்
மதியிழந்து
கதிகலைந்து
அலைகிறேன் –இங்கே
மெய்யாகவே! ஏன்? மௌனமானாய்?
சோகத்தின்
சொந்தமாகிப்
போனேன் -இந்த
ஏகத்தின்
எதிரியாகி
ஏங்கிவிட்டேன்
வாதத்தில்
சாதனை
புரிந்தவளே -இன்று
மொத்தத்தில்! ஏன்? மௌனமானாய்?
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
இலங்கைச் சரித்திரம் -19

பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள்.தொடர்ந்து 20வது பக்கத்திற்கு...
இலங்கைச் சரித்திரம்-18

கிறிஸ்துவுக்கு முன் 477 ம் ஆண்டளவிலேயே விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பதை, திரு.முத்துத் தம்பிப் பிள்ளை வரலாற்றைக் கொண்டு நிருபித்துள்ளார் பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள். தொடரும் 19ம் பக்கத்திற்குச் செல்ல ..இலங்கைச் சரித்திரம் -17

பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள் தொடரும். 18 ம் பக்கத்திற்குச் செல்ல ...